/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து 3 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி
/
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து 3 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து 3 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து 3 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜன 04, 2025 04:56 AM

புதுச்சேரி: நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்த மூன்று நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி, அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி, மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் சார்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 குறித்து, மாநில மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர்கள், உறுப்பினர்களுக்கான 3 நாள் திறன் மேம்பாபட்டு பயிற்சி, சன்வே ஓட்டலில் நேற்று துவங்கியது.
விழாவிற்கு சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கி, பேசுகையில், அனைத்து மக்களும் எளிய முறையில் தங்களது நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 உருவாக்கப்பட்டது' என்றார்.
துவக்க விழாவில் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் சீனிவாசன் வரவேற்றார். சபாநாயகர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, நுகர்வோரின் உரிமைகளை பாதுகாக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 கொண்டுவரப்பட்டது.
இன்றைய காலகட்டத்தில் நுகர்வோர் தங்கள் உரிமையை பாதுகாப்பதற்கு நுகர்வோர் நீதிமன்றங்களை அதிக அளவில் நாடுகின்றனர்' என்றனர்.
இதில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் தீவு தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
போபால் தேசிய சட்ட பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் விஜயக்குமார் பங்கேற்று, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கினார்.
கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் உட்பட பலர் பங்கேற்றனர். சட்டக் கல்லுாரி உதவி பேராசிரியர் விஜயன் நன்றி கூறினார். திறன் மேம்பாட்டு பயிற்சி இன்று மற்றும் நாளை நடக்கிறது.