தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 3 பேரிடம் ரூ. 4.17 லட்சம் ‘அபேஸ்’ சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

3 பேரிடம் ரூ. 4.17 லட்சம் ‘அபேஸ்’ சைபர் கிரைம் கும்பல் கைவரிசை

3 பேரிடம் ரூ. 4.17 லட்சம் ‘அபேஸ்’ சைபர் கிரைம் கும்பல் கைவரிசை


ADDED : ஆக 25, 2026 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 11:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று பேரிடம் 4 லட்சத்து 17 ஆயிரத்து 326 ரூபாய் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெட்டியார்பாளையம், ஜான்சி நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 34. இவரது மொபைல் எண்ணிற்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டதாக ஆர்.டி.ஓ., லிங்க் ஒன்று வந்துள்ளது. அதன் உள்ளே விவரங்களை பதிவு செய்த நிலையில், சந்தேமடைந்த அவர், உடனே வெளியேறி விட்டார். அதற்குள், அவரது வங்கி கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அவரது கணக்கில் இருந்த ஒரு லட்சத்து 37 ஆயிரத்த 593 ரூபாயை, மர்ம நபர்கள் எடுத்து விட்டனர். இது குறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல், சொக்கநாதன்பேட்டையை சேர்ந்த நந்தகோபால் 54; என்பவரின் கிரெடிட் கார்டு கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதிலிருந்த ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 44 ரூபாய் மர்ம நபர்கள் எடுத்து விட்டனர். முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவரின் மொபைல் போனில் வாட்ஸ் ஆப் வழியாக பேசிய மர்ம நபர், மசாஜ் சர்வீஸ் தொடர்பாக பேசி, அவரிடம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 689 ரூபாயை, யு.பி.ஐ., மூலமாக பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us