காலாப்பட்டு சிறை கைதிகளிடம் 3 மொபைல் போன்கள் பறிமுதல்
காலாப்பட்டு சிறை கைதிகளிடம் 3 மொபைல் போன்கள் பறிமுதல்
ADDED : ஏப் 16, 2026 11:01 PM
புதுச்சேரி: காலாப்பட்டு சிறையில் தண்டனை கைதிகள் பதுக்கி வைத்திருந்த 3 மொபைல் போன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில் 250க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவதாக வந்த புகாரின் பேரில், சிறை அதிகாரிகள் கடந்த 10ம் தேதி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தண்டனை கைதிகள் அறையின் பின்புறம் உள்ள வாழை தோட்டத்தில் பிளாஸ்டிக் கவர்களில் மறைத்து வைத்திருந்த 3 மொபைல் போன்கள் மற்றும் சார்ஜரை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், மேட்டுப்பாளையம் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சங்கர் மகன் முத்து (எ) முத்துகுமார்,28; அரியாங்குப்பம் போக்சோ வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சிங்கரவேலு மகன் ராஜி (எ) ரமணா, 25; ஆகியோர் மொபைல் போன்களை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிறை அதிகாரி பாஸ்கரன் அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் தண்டனை கைதிகள் முத்து, ரமணா ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாறாித்து வருகின்றனர்.
