ADDED : ஜன 20, 2024 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கஞ்சா விற்ற மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரினா பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்களை கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், முதலியார்பேட்டை அனிதா நகர் ரவீந்திரன், 23; சுமன்ராஜ், 23; ரெட்டியார்பாளையம் பாவாணர் நகர் மோகன்ராஜ், 19, ஆகியோர் என, தெரியவந்தது.
மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 130 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.