ADDED : நவ 27, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கடைகளில் குட்கா விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
பெட்டிக்கடைகளில், தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா விற்பதாக ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் உப்பளம் அம்பேத்கர் சாலையில் உள்ள பெட்டிக்கடைகளில் சோதனை செய்தனர். அங்கு, பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் கார்த்திக், 47; என்பவரை கைது செய்தனர்.
அதே பகுதி டீக்கடையில், குட்கா விற்ற உரிமையாளர் நேதாஜி நகர் மகேந்திரன், 48; மற்றும் லப்போர்த் வீதி மளிகை கடையில், குட்கா விற்ற உரிமையாளர் சண்முகாபுரம் மணிகண்டன், 38; ஆகியோரை கைது செய்து, குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

