ADDED : டிச 09, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். சோலை நகர் மீன் மார்க்கெட் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
அவர்கள், தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
விசாரணையில் சோலை நகர், கண்ணதாசன் வீதியை சேர்ந்த செந்தில்குமார், 40; கோவிந்தசாலை, பாரதிபுரம் கோவிந்தராஜ், 42, பிள்ளையார்தோட்டம், கெங்கையம்மன் கோவில் வீதி பழனிகுமார், 49, என, தெரியவந்தது.
மூவரையும் கைது செய்து போலீசார் அவர்களிடம் இருந்த 4 மொபைல் போன்கள், 10 ஆயிரம் பணம் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.