/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
/
பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
ADDED : மே 09, 2025 03:23 AM
புதுச்சேரி: காமராஜர் சாலையில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி, காமராஜர் சாலை ஐஸ் பேக்டரி அருகே சிலர் பொது மக்களை கத்தியை காட்டி மிரட்டி வருவதாக பெரியக்கடை போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். இதில், இரண்டு பேர் கத்தியை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், கோவிந்தசாலையை சேர்ந்த சந்திரகுமார் மகன் சந்திரா, 20; சரவணன் மகன் ஹேம்நாத், 19; ஜசாத் மகன் அஷ்ரப், 20; என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த 2 கத்திகளை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் மீது பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டியதாக வழக்குப் பதிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட சந்திரா, ஹேம்நாத் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு வீச்சு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.