/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய 3 பேர் கைது
ADDED : மே 27, 2025 07:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் புதுக்குளம் பகுதியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், குற்றப்பிரிவு போலீசார் வேல்முருகன் ஆகியோர் அந்த பகுதிக்கு சென்றனர். அங்கு கத்தியுடன் நின்ற மூவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், பழைய பூரணாங்குப்பம் தெருவை சேர்ந்த ரஞ்சித், 19, சஞ்சய், 20, பாலமுருகன், 20, என்பது தெரியவந்தது.
மூன்று பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து பைக், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 பேரும் கோர்ட்டில், ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.