ADDED : ஏப் 21, 2026 06:15 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 1.58 லட்சம் இழந்துள்ளனர்.
புதுச்சேரி, பெரிய காலாப்பட்டு சேர்ந்த பெண்ணை தொடர்பு கொண்ட மர்மநபர், வீட்டில் இருந்தபடி பகுதிநேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார்.
இதைநம்பிய அப்பெண் மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 90 ஆயிரம் முதலீடு செய்தார். பின், அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.
இதேபோல், புதுச்சேரியை சேர்ந்தவர் 50 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்த பெண் போலி ஆன்லைன் வர்த்தகத்தில் 18 ஆயிரத்து 446 என 3 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 1 லட்சத்து 58 ஆயிரத்து 446 இழந்துள்ளனர்.
இது குறித்து புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
