/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா விற்ற 3 பேர் கைது 150 கிராம் பறிமுதல்
/
கஞ்சா விற்ற 3 பேர் கைது 150 கிராம் பறிமுதல்
ADDED : பிப் 28, 2024 11:02 PM
அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தவளக்குப்பம் போலீசார் நல்லவாடு பகுதியில் நேற்று சோதனை செய்தனர். தானாம்பாளையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்ற 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் கஞ்சா வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் விசாரணை யில் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த விஜயகாந்த், 18; சுசீந்திரன், 21; இளம்பாரதி, 21 என தெரியவந்தது.
போலீசார் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து, ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள 150 கிராம் கஞ்சா மற்றும் ரூ. 6 ஆயிரம் ரொக்கம், மூன்று மொபைல் போன்கள், இரண்டு பைக்குகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும், நேற்று கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

