ADDED : நவ 14, 2026 07:06 PM
அ நிறம் | அளவு
பாகூர்: பாகூர் போலீசார் நேற்று (நவ.,13) ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் நவாத்தோப்பு பகுதியில் ரகளையில் ஈடுபட்ட கடலுார், காரைக்காடு கிராமத்தை சேர்ந்த ரவீந்திரன், 44; மணமேடு பெட்ரோல் பங்க் அருகே ரகளையில் ஈடுபட்ட நெல்லிக்குப்பம் பிரபாகரன், 46, ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
அதேபோல், கிருமாம்பாக்கம் போலீசார் ரோந்து சென்றபோது, முள்ளோடையில் ரகளையில் ஈடுபட்ட வி.புதுார் கிராமத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன், 34, மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
