தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு


ADDED : அக் 31, 2024 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2024 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் உத்தரவின்படி, புதுச்சேரி மாநிலயத்தில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப் படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதி துறை சார்பு செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார்.

இந்த உத்தரவு அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.580 முதல் ரூ.6 ஆயிரத்து 800 வரை கிடைக்கும்.

இந்த அகவிலைப்படி உயர்வு ஜுலை 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படுகிறது. புதுச்சேரி அரசு ஊழியர்கள் 20 ஆயிரம் பேர் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.16 கோடி கூடுதல் செலவாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us