/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போலீசாருக்கு 3 கட்ட பதவி உயர்வு
/
போலீசாருக்கு 3 கட்ட பதவி உயர்வு
ADDED : ஜன 12, 2024 03:48 AM
புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த காலத்தில், 15 ஆண்டுகள் பணியாற்றும் காவலர்களுக்கு, சிறப்பு நிலை தலைமை காவலர் பதவியும், 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு, சிறப்பு நிலை உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவியும், 35 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு, சிறப்பு நிலை சப்-இன்ஸ்பெக்டர் பதவியும், வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு, சிறப்பு நிலை தலைமை காவலர் பதவியும், 15 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு, சிறப்பு நிலை உதவி சப்-இன்ஸ்பெக்டர் பதவியும், 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு, சிறப்பு நிலை சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வும் வழங்க வேண்டும் என, உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் போலீசார் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்ட உறுதி செய்யப்பட்ட தொழில் முன்னேற்ற திட்டத்தின் கீழ், 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு, சிறப்பு நிலை தலைமை காவலர், 15 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு, சிறப்பு நிலை உதவி இன்ஸ்பெக்டர், 25 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு, சிறப்பு நிலை சப்-இன்ஸ்பெக்டர், என மூன்று நிலைகளாக பதவி உயர்வு, மற்றும் தர ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான கோப்புக்கு, அரசு அனுமதி அளித்த நிலையில், கவர்னரின் அனுமதிக்காக, ராஜ்நிவாசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளதை தொடர்ந்து நேற்று உடனடியாக அரசாணை வெளியிடப்பட்டது. இது போலீசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.