/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 வாலிபர்கள் சரமாரி வெட்டி படுகொலை புதுச்சேரியில் பயங்கரம்
/
3 வாலிபர்கள் சரமாரி வெட்டி படுகொலை புதுச்சேரியில் பயங்கரம்
3 வாலிபர்கள் சரமாரி வெட்டி படுகொலை புதுச்சேரியில் பயங்கரம்
3 வாலிபர்கள் சரமாரி வெட்டி படுகொலை புதுச்சேரியில் பயங்கரம்
ADDED : பிப் 15, 2025 05:13 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் முகம் சிதைக்கப்பட்ட நிலை யில், மூன்று வாலிபர்களை கொடூராக வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை போலீசார்தேடி வருகின்றனர். ரவுடி கும்பலுக்குள் யார் பெரிய தாதா என்பதை நிரூபிக்க கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டதா என விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, ரெயின்போ நகர், 7வது குறுக்கு தெரு இறுதியில், திருவள்ளுவர் நகர் பின்பகுதி குடியிருப்பு மத்தியில், மேற்கூரை இல்லாத பாழடைந்த வீட்டில் 4 அடி உயர இடிந்த 2 சுவர்கள் மட்டுமே உள்ளது. இங்கு, நேற்று காலை 3 வாலிபர்கள் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்தும், ஒருவர் உயிருக்கு போராடியும் கிடந்தார்.
தகவலறிந்த பெரியக்கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வாலிபரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் இறந்தார்.
டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம், சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி.,க் கள் ரகுநாயகம், ஜிந்தா கோதண்டராமன்,' வீரவல்லபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர்கள், உழவர்கரை வின்சென்ட் வீதியைச் சேர்ந்த கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி தெஸ்தான் மகன் 'ரஷி, 20; மற்றும் அவரது 'நண்பர் உருளையன்பேட்டை திடீர் நகர் ஸ்ரீதர் மகன் தேவா (எ) தேவகுமார், 21; மூலக்குளம் ஜெ.ஜெ. நகர் மெயின்ரோட்டை சேர்ந்த ஆதி (எ) ஆதித்யா, 20; என தெரியவந்தது.
ஒரே இடத்தில் தலை சிதைக்கப்பட்டு, மூன்று வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து திருவள்ளுவர் நகர் வழியாக சிறிது துாரம் ஒடி நின்றது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
மூன்று உடல்களும் கதிர்காமம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதில், ஆதித்யாவின் உடல் நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்து' அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.'
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரெயின்போ நகர் 'சத்யா, முருங்கப்பாக்கம் முகிலன் தரப்பிற்கும், முதலியார்பேட்டை 'விக்கி (எ) விக்னேஷ்வர் தரப்பிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஆக., 19ம் தேதி நெல்லிக்குப்பம் சித்தரசூர் வயல் வெளியில் முகிலன் வெட்டி கொலை செய்யப் பட்டார். இதில் 'விக்கி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இருந்து வெளியே வந்த விக்கி, தமிழரசன் டீம் சத்யாவை கொலை செய்ய திட்டமிட்டு காத்திருந்ததாக கூறப்படுகிறது.
சத்யா எங்கு செல்கிறார் என்பதை கண்காணிக்கும் வேலையை ரஷியிடம் கொடுத்து இருந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு ரஷி தனது நண்பர்கள், தேவா, ஆதித்யாவுடன் சத்யாவை பின் தொடர்ந்து சென்றபோது, சத்யா மற்றும் அவரது கூட்டாளிகள் சுற்றி வளைத்து ரஷி, தேவா, ஆதித்யாவை பிடித்து, தங்களது வாகனத்தில் கொண்டு சென்று ரெயின்போ நகரில் வெட்டி கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது.
கொலை வழக்கில் இதுவரை ஒருவரும் கைதாகவில்லை என்பதால், கொலைக்கான முழு விபரம் தெரியவில்லை என கூறினர்.
போலீஸ் திணறல்
கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு, கிழக்கு சரகத்தில் உள்ள அனைத்து இன்ஸ்பெக்டர்கள், கிரைம் போலீசார் வந்தனர்.
ஆனால் கொலை செய்யப்பட்டது யார் என்பதை உடனடியாக போலீசாரால் கண்டறிய முடியாத அளவுக்கு முகத்தை கொடூராக வெட்டி சிதைத்து இருந்தனர்.
சந்தேகத்திற்குறிய நபர்களின் குடும்பத்தினருக்கு போலீசார் போன் செய்து, அந்த நபர் வீட்டில் உள்ளாரா என விசாரித்தபோது, இல்லை என தெரியவந்த பின்பே கொலையானவர்கள் யார் என்ற விபரம் தெரியவந்தது.
அக்கம்பக்கத்தில்விசாரணை
கொலை செய்யப்பட்ட இடத்தை சுற்றிலும் குடியிருப்பு உள்ளது. 3 பேரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்யும்போது சத்தம் கேட்டு இருக்கும். ஆனால் சுற்றியுள்ள வீட்டில் உள்ளோர் எந்த சத்தமும் கேட்கவில்லை என போலீசாரிடம் தெரிவித்தனர்.
உழவர்கரை ரவுடி தெஸ்தான் கடந்த 2008ம் ஆண்டு அவரது வீட்டில் வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்டார். அப்போது, அவரது மகன் ரஷிக்கு 1 வயது.
கடந்த 2 ஆண்டிற்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ரஷியின் மகளின் முதல் பிறந்த நாள் கடந்த சில நாட்களுக்கு முன் கொண்டாடப்பட்டது குறிப்பிடதக்கது.