/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுதந்திர தின பாதுகாப்பிற்கு 3 எஸ்.பி.,க்கள் நியமனம்
/
சுதந்திர தின பாதுகாப்பிற்கு 3 எஸ்.பி.,க்கள் நியமனம்
சுதந்திர தின பாதுகாப்பிற்கு 3 எஸ்.பி.,க்கள் நியமனம்
சுதந்திர தின பாதுகாப்பிற்கு 3 எஸ்.பி.,க்கள் நியமனம்
ADDED : ஆக 09, 2025 07:15 AM
புதுச்சேரி : புதுச்சேரிக்கு புதிதாக மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதனிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளையொட்டி, காவல் துறையில் எஸ்.பி., பதவி நிலையில் காலியாகவுள்ள அந்த பொறுப்புகளுக்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, வடக்கு பிரிவுக்கு ஸ்ருதி, காரைக்காலுக்கு வினய்குமார் காட்கே, ஏனாமிற்கு ஜிந்தா கோதண்டராம் ஆகியோர் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பின் நலனுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை காவல் துறை (தலைமையகம்) எஸ்.பி., சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.