/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
3 துணை மின் நிலையங்கள்: முதல்வர் ரங்கசாமி தகவல்
/
3 துணை மின் நிலையங்கள்: முதல்வர் ரங்கசாமி தகவல்
ADDED : ஆக 04, 2025 01:25 AM
புதுச்சேரி : புதுச்சேரி மின்துறையில் தேர்வு செய்யப்பட்ட இளநிலை பொறியாளர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, பேசியதாவது:
புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்பாமல் இருந்ததால், இளைஞர்கள் அரசு வேலைக்கு தகுதியான வயதை கடந்து செல்கின்றனர். இவர்களுக்கு வயது தளர்வு கொடுக்க நாம் நினைத்தால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவைப்படுகிறது. இருப்பினும் தற்போது நடவடிக்கை எடுத்து புதிய பணியிடங்களை நிரப்பி வருகிறோம்.
பெரிய மாநிலமான குஜராத்துக்கு இணையான மின்சாரப் பயன்பாடு புதுச்சேரியில் இருக்கிறது. அந்த அளவுக்குப் புதுச்சேரி பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும் போதிய பொறியாளர்கள் இல்லை.
அதைக் கருத்தில் கொண்டு தான் இப்போது இளநிலைப் பொறியாளர்களை நியமித்துள்ளோம்.
நவீன தொழில்நுட்பம் தெரிந்தவர்களாக இவர்கள் இருப்பதால் மின்தடை குறைக்கப்படும். மின்சார துறையில் கட்டுமான உதவியாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவர். அவர்களும் நியமிக்கப்பட்டால் மின்தடை இல்லாத மாநிலமாக புதுச்சேரி உயரும். தவளக்குப்பம், லாஸ்பேட்டை, மரப்பாலம் பகுதியில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க உள்ளோம்' என்றார்.

