/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபரிடம் செயின் பறிப்பு திருநங்கைகள் 3 பேருக்கு வலை
/
வாலிபரிடம் செயின் பறிப்பு திருநங்கைகள் 3 பேருக்கு வலை
வாலிபரிடம் செயின் பறிப்பு திருநங்கைகள் 3 பேருக்கு வலை
வாலிபரிடம் செயின் பறிப்பு திருநங்கைகள் 3 பேருக்கு வலை
ADDED : அக் 16, 2025 02:31 AM
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே பணம் கேட்பது போல் நடித்து, புதுச்சேரி வாலிபரிடம் செயினை பறித்து சென்ற மூன்று திருநங்கைகளை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் மணவெளி சண்முகா நகரை சேர்ந்தவர் நாகராஜன்,28; இவர் நேற்று முன்தினம் இரவு கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு சாவடியில் வசித்து வரும் பெற்றோரை பார்க்க சென்றார். பொம்மையார்பாளையம் பீச் மெயின் ரோடு அருகே செம்மண் சாலையோரம் நின்றுள்ளார்.
அப்போது, அங்கு இருளில் நின்றிருந்த மூன்று திருநங்கைகள், நாகராஜனை கைக்காட்டி அழைத்து, பணம் கேட்டுள்ளனர். அவர் தனது பர்சில் இருந்து பணத்தை எடுக்க முயன்றபோது, அந்த திருநங்கைகள், அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் செயினை பறித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கூச்சலிடவே திருநங்கைகள் தலைமறைவாகினர்.
நாகராஜன் அளித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, வாலிபரிடம் செயின் பறித்த திருநங்கைகள் மூவரை தேடி வருகின்றனர்.