ADDED : மே 11, 2025 11:27 PM

அரியாங்குப்பம்: கஞ்ச விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து, பைக், மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில், போலீசார் ஆப்ரேஷன் விடியல் என்ற திட்டத்தின் மூலம், கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வேல்முருகன், சிரஞ்சீவி ஆகியோர் அரியாங்குப்பம் சொர்ணா நகர் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த இடத்தில், சந்தேகமான முறையில், நின்ற 3 வாலிபர்களை போலீசார் பிடித்து சோதனை நடத்தினர். அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்தனர்.
அவர்களை விசாரித்ததில், உப்பளம் பகுதியை சேர்ந்த மதிவாணன், 30, நோணாங்குப்பத்தை சேர்ந்த சரவணன், 19, ஈஸ்வர், 20, என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து, 10 ஆயிரம் மதிப்புள்ள 85 கிராம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள், ஒரு பைக், 3 மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மூன்று பேரையும் கைது செய்து, நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.