/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திய செலவுக் கணக்காளர் கழக புதுச்சேரி பிரிவின் 30ம் ஆண்டு விழா
/
இந்திய செலவுக் கணக்காளர் கழக புதுச்சேரி பிரிவின் 30ம் ஆண்டு விழா
இந்திய செலவுக் கணக்காளர் கழக புதுச்சேரி பிரிவின் 30ம் ஆண்டு விழா
இந்திய செலவுக் கணக்காளர் கழக புதுச்சேரி பிரிவின் 30ம் ஆண்டு விழா
ADDED : டிச 23, 2024 04:16 AM

புதுச்சேரி : இந்திய செலவுக் கணக்காளர் கழகத்தின் புதுச்சேரி பிரிவின் 30ம் ஆண்டு விழா அதிதி ஓட்டலில் நடந்தது.
இந்திய செலவுக் கணக்காளர் கழகத்தின் புதுச்சேரி பிரிவு தலைவர் சொக்கலிங்கம் வரவேற்றார். விழாவில் இந்திய செலவு கணக்காளர் கழகத்தின் முன்னாள் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், ஜி.பி. ராவ், ராமன், ஆகியோரின் சேவை குறித்து பாராட்டப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய கவுன்சில் உறுப்பினர்கள் மூர்த்தி, நீரஜ் டிஜோஷி, ஹர்ஷத் தேஷ்பாண்டே, சித்தரஞ்சன் சட்டோ பாத்யாய், சுரேஷ் ஆர் குஞ்சல்லி, துணைத் தலைவர் சீனிவாச பிரசாத், தலைவர் பிபூதி பூசன் நாயக் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
இந்தி செலவுக் கண்காளர் தெற்கு பிராந்திய கவுன்சிலின் தலைவர் விஸ்வநாத் பட், பாராட்டி பேசினார். முன்னாள் தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், ராஜூ ஐயர் ஆகியோர் மாணவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சியில் புதுச்சேரி பிரிவின் பங்களிப்பு குறித்து பேசினர்.
புதுச்சேரி கிளையின் முன்னாள் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதுச்சேரி பிரிவின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
முன்னாள் தலைவர்கள், மூத்த உறுப்பினர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.