/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அமைச்சர், எம்.எல்.ஏ., அலுவலகங்களில் 310 பேருக்கு டெபுடேஷன் பணி
/
அமைச்சர், எம்.எல்.ஏ., அலுவலகங்களில் 310 பேருக்கு டெபுடேஷன் பணி
அமைச்சர், எம்.எல்.ஏ., அலுவலகங்களில் 310 பேருக்கு டெபுடேஷன் பணி
அமைச்சர், எம்.எல்.ஏ., அலுவலகங்களில் 310 பேருக்கு டெபுடேஷன் பணி
ADDED : நவ 11, 2024 07:35 AM
புதுச்சேரி : பொதுப்பணித்துறையில் டெபுடேஷன் என்ற பெயரில் 310 அதிகாரிகள், ஊழியர்கள், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் பணியாற்றி வரும் தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரியில் அனைத்து அரசு துறைகளிலும் பணியாற்றும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் தங்களுக்கு தெரிந்த அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களின் சிபாரிசு மூலம் டெபுடேஷன் பணி வாங்கி கொண்டு, தங்களின் சொந்து அலுவலகத்திற்கு செல்லாமல், அமைச்சர், எம்.எல். ஏ.,க்கள் அலுவலகங்களில் வலம் வருகின்றனர்.
இதில் டெபுடேஷன் பணி பெற்ற 50 சதவீத ஊழியர்கள் அமைச்சர், எம்.எல்.ஏ., அலுவலகம், வீட்டிற்கு கூட செல்வது கிடையாது.
பொதுப்பணித்துறையில் பொறியாளர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை 310 பேர் டெபுடேஷன் பணி பெற்று கொண்டு வெளியில் சுற்றி வருவதாக ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டுகிறது.
ஆட்கள் பற்றாக்குறையால் பொதுப்பணித்துறையில் பல பணிகள் மேற்கொள்ள முடியாமல் கிடப்பில் கிடக்கிறது.
ஆளும் கட்சி ஆதரவாளர்கள் டெபுடேஷனில் சென்று விட்டதால், எதிர்கட்சி ஆதரவு பெற்ற ஊழியர்கள் ஆட்கள் பற்றாக்குறை என காரணம் கூறி பல பணிகளை செய்ய மறுத்து அதிகாரிகளிடம் மல்லுகட்டி வருகின்றனர்.
டெபுடேஷனில் சென்ற ஊழியர்கள் குறித்து பொதுப்பணித்துறை ஊழியர் சங்கங்கள் கவர்னரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. விரைவில் டெபுடேஷனில் சென்ற ஊழியர்களின் விபரம் குறித்து விசாரணை துவங்க உள்ளது.