/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 32 புகார்களுக்கு தீர்வு
/
மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 32 புகார்களுக்கு தீர்வு
மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 32 புகார்களுக்கு தீர்வு
மக்கள் மன்ற நிகழ்ச்சியில் 32 புகார்களுக்கு தீர்வு
ADDED : டிச 08, 2025 05:15 AM

புதுச்சேரி: ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்ற நிகழ்ச்சி, டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் பொது மக்களிடம் புகார்களை கேட்டறிந்தார்.
எஸ்.பி., ஸ்ருதி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர். அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், சேதராப்பட்டில் எஸ்.பி., ரகுநாயகம், காட்டேரிக்குப்பத்தில் எஸ்.பி., சுப்ரமணியன் ஆகியோர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
இதேபோல் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., ரச்சனா சிங் மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் குறைகளை கேட்டனர்.
புதுச்சேரி காரைக்கால், மாகி, ஏனாமில் நடந்த மக்கள் மன்றத்தில் 49 பெண்கள் உள்பட 200 பேர் பங்கேற்றனர். மொத்தம் 46 புகார்களில் 32 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
கோரிமேடு சைபர் கி ரைம் போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்ற நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு தலைமையில் நடந்தது.
இதில் பொதுமக்கள் தவறவிட்ட ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 16 மொபைல் போன்கள் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

