தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/3 பேரிடம் ரூ.3.42 லட்சம் பணம் மோசடி

3 பேரிடம் ரூ.3.42 லட்சம் பணம் மோசடி

3 பேரிடம் ரூ.3.42 லட்சம் பணம் மோசடி


ADDED : மார் 12, 2024 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2024 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : புதுச்சேரியை சேர்ந்தவர் மீனாட்சி. இவரிடம் மர்ம நபர் டெலிகிராம் மூலம் பேசி ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறினார். அதை நம்பி அவர் தனது வங்கி கணக்கில் இருந்து ரூ 1.33 லட்சம் பணத்தை அனுப்பினார்.

மேலும் லாவண்யா என்பவரிடம் மர்ம நபர், ஆன்லைன் மூலம் அதிக முதலீடு செய்தால் அதிக சம்பாதிக்கலாம் என கூறியதை நம்பி அவர் ரூ. 22 ஆயிரம் பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளார்.

நந்தகுமார் என்பவரிடம் ரூ.1.87 லட்சம் பணத்தை ஆன்லைன் மூலம் மோசடி செய்துள்ளனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us