சென்டாக் பட்டியலில் இருந்து 35 மாணவர்கள் திடீர் நீக்கம்
சென்டாக் பட்டியலில் இருந்து 35 மாணவர்கள் திடீர் நீக்கம்
UPDATED : அக் 11, 2026 09:20 PM
ADDED : அக் 11, 2026 09:18 PM
புதுச்சேரி: மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்ந்த 35 மாணவர்களின் பெயர்கள் சென்டாக் தகுதிப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டின் மூன்றாம் சுற்றில் சேரும் மாணவர்களை, மாநில கலந்தாய்வு மூன்றாம் சுற்றுக்கு முன்பாக நீக்குவது கட்டாயமாகும் என இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இந்த சுற்றில் மருத்துவ சீட்களை எடுத்து வேண்டாம் என்று மறுக்க வாய்ப்பு இல்லை என்பதால், அகில இந்திய ஒதுக்கீட்டின் மூலம் இடங்களைப் பெற்றுள்ளவர்கள் சென்டாக் மாநில கலந்தாய்வில் மீண்டும் இடங்களைப் பெறாதவாறு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 35 மாணவர்களின் பெயர்கள் சென்டாக் தகுதி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, மாணவர்கள் தங்களது லாகின் டாஷ்போர்டில் உள்ள குறைதீர்க்கும் பகுதி மூலமாக வினவிகளை சமர்ப்பிக்கலாம் அல்லது 0413-2655570, 2655571 என்ற உதவி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
