தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுப்ரமணிய பாரதி மேல்நிலை பள்ளியின் 35ம் ஆண்டு விழா

 சுப்ரமணிய பாரதி மேல்நிலை பள்ளியின் 35ம் ஆண்டு விழா

 சுப்ரமணிய பாரதி மேல்நிலை பள்ளியின் 35ம் ஆண்டு விழா


ADDED : பிப் 10, 2026 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் 35ம் ஆண்டு மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.

பள்ளியின் நிர்வாகி டாக்டர் சம்பத் வரவேற்றார். ஊர் பிரமுகர் துரைராஜன் தலைமை தாங்கினார். பள்ளியின் சேர்மன்கள் ஹரிஷ் குமார், மோகன் குமார் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், சாரண இயக்க மாநில ஆணையர் சண்முகம், மண்ணாடிப்பட்டுஅரசு மருத்துவமனை பொறுப்பு அதிகாரி பாலசுப்ரமணியன், பாலாஜி மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் அஜித்தா, தொழிலதிபர் ரத்தின சந்திரசேகரன், நாசர், கண்ணன், செல்வகுமார், பூமிநாதன், ராஜாமணி வாழ்த்தி பேசினர்.

விழாவில், 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில மற்றும் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்கள் மற்றும் பாடவாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், செயலாளர் சிவ ராஜன், பொருளாளர் சிவசுப்ரமணியன், துணைத் தலை வர் இளமதியழகன் மற்றும் தனியார் பள்ளி நிர்வாகிகள் அழகப்பன், மோகன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில், கடந்த ஆண்டு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் உயர் மதிப்பெண் பெற்ற ஒத்துழைப்பு அளித்த ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

பள்ளி மாணவ- மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

பள்ளியின் துணை முதல்வர் சுசிலா சம்பத் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us