/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய கேரம் விளையாட்டு போட்டி புதுச்சேரி அணிக்கு 3ம் இடம்
/
தேசிய கேரம் விளையாட்டு போட்டி புதுச்சேரி அணிக்கு 3ம் இடம்
தேசிய கேரம் விளையாட்டு போட்டி புதுச்சேரி அணிக்கு 3ம் இடம்
தேசிய கேரம் விளையாட்டு போட்டி புதுச்சேரி அணிக்கு 3ம் இடம்
ADDED : பிப் 15, 2024 05:16 AM

புதுச்சேரி, : தேசிய அளவிலான ஜூனியர் கேரம் விளையாட்டு போட்டியில் குழு சாம்பியன்ஷிப் பிரிவில் புதுச்சேரி மகளிர் அணி மூன்றாம் இடம் பெற்றது.
48வது தேசிய ஜூனியர் கேரம் விளையாட்டு போட்டிகள் மதுரையில் உள்ள எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரியில் கடந்த 10ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை நடந்தது. இதில், 16 மாநிலங்களை சேர்ந்த 92 வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்த போட்டியில் பங்கேற்ற புதுச்சேரி அமெச்சூர் கேரம் அசோசியேஷனை சேர்ந்த புதுச்சேரி மகளிர் ஜூனியர் அணி, குழு சாம்பியன்ஷிப் பிரிவில் மூன்றாம் பரிசை வென்றது.
வெற்றி கோப்பையுடன் திரும்பிய புதுச்சேரி அணியினரை, புதுச்சேரி அமெச்சூர் கேரம் அசோசியேஷன் தலைவர் ஜெகஜோதி மற்றும் நிர்வாகிகள் பரஞ்ஜோதி, திருமூர்த்தி, வேல்முருகன், செந்தமிழ்க்குமரன், சி.எஸ்.பி., அமைப்பின் தலைவர் தனசேகர் ஆகியோர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
கேரம் அசோசியேஷன் தலைவர் ஜெகஜோதி கூறும்போது, 'புதுச்சேரி கேரம் விளையாட்டு வரலாற்றில், குழு சாம்பியன்ஷிப் போட்டியில் தேசிய அளவில் புதுச்சேரி அணி மூன்றாம் இடம் பிடித்தது இதுவே முதல் முறையாகும்' என தெரிவித்தார்.

