/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தி வந்த ஆந்திர வாலிபர்கள் 4 பேர் கைது
/
புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தி வந்த ஆந்திர வாலிபர்கள் 4 பேர் கைது
புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தி வந்த ஆந்திர வாலிபர்கள் 4 பேர் கைது
புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தி வந்த ஆந்திர வாலிபர்கள் 4 பேர் கைது
ADDED : ஜன 11, 2024 03:54 AM

புதுச்சேரி: புதுச்சேரிக்கு 4.5 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஆந்திர வாலிபர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி அடுத்த திருவண்டார்கோவில் ஏரிக்கரை பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன் கஞ்சா விற்ற பள்ளித்தென்னல் சத்யா நகர், ஆனந்தன், 25; அருள் (எ) அன்புசெழியன், 24; திண்டிவனம் வெள்ளிமேடுபேட்டை ஆர்தஷ், 34; ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
அவர்களை விசாரணை செய்ததில், ஆந்திராவில் இருந்து சிலர் புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தி வந்து கொடுத்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, கஞ்சா சப்ளை செய்யும் நபர்களை பிடிக்க திட்டமிட்ட போலீசார், கைது செய்யப்பட்டவர்கள் மூலம், கஞ்சா வேண்டும் என, சப்ளையர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து, சரக்கு லாரிகளில் லிப்ட் கேட்டு கஞ்சா கொண்டு வந்த ஆந்திர மாநிலம், நெல்லுாரை சேர்ந்த அன்டாகுன்டா நவீன்குமார்,28; காயார்பூ சதிஷ்,31; ஷாகித் பப்ளு, 22; அரவா ஜேம்ஸ், 21; ஆகியோரை நேற்று நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.