ADDED : டிச 24, 2024 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டபபாக்கம்: லிங்காரெட்டிப்பாளையம் மலட்டாற்றில் மாட்டு வண்டியில் மணல் திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று அதிகாலை 3:00 மணியளவில் ரோந்து சென்றனர். லிங்காரெட்டிப்பாளையம் மலட்டாற்றில் இருந்து நான்கு மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக் கொண்டு, நெட்டப்பாக்கம் நேரு நகர் வழியாக வந்து கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் மடக்கினர். மாட்டுவண்டியில் மணல் திருடி வந்த கரியணிக்கம் காலனியைச் சேர்ந்த அர்தீஷ் 21, கல்மண்டபம் பேட் சிவலிங்கம், 24; சொக்கம்பேட் விஷ்வா, 20;திவான், 22,ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.