ADDED : நவ 25, 2026 05:51 PM
புதுச்சேரி: வேல்ராம்பட்டில் மாணவர்களுக்கு விற்க கஞ்சா வைத்திருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
முதலியார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் தலைமையிலான போலீசார் நேற்று (நவ.,24) காலை வேல்ராம்பேட் பகுதியில் ரோந்து சென்றனர். ஏரிக்கரை சாலை தனியார் பள்ளி அருகில், இருந்த நான்கு வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர்.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். அவர்களை சோதனை செய்ததில், 244 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் வானரப்பேட்டை விருமாண்டி மகன் விக்னேஷ்,21; ரோடியர்பேட் முருகன் மகன் சரண்,22; ஆட்டுப்பட்டி வேலு மகன் பிவீன்குமார்,24; வானரப்பேட்டை நாராயணன் மகன் வரதராஜ்,20, ஆகியோர் என்பதும், அவர்கள் பணம் சாம்பதிக்கும் நோக்கத்துடன் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்க வைத்திருந்ததும் தெரிந்தது.
இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேரையும், கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
