/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது
/
சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது
ADDED : செப் 23, 2024 05:08 AM
புதுச்சேரி : புதுச்சேரி நகர பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி நகர பகுதியில் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பெரியக்கடை சப்இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று காலை கேப்டன் மாரிஸ்சேவியார் வீதி, சின்ன வாய்க்கால் வீதி சந்திப்பு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 4 பேரை பிடித்து, விசாரித்தனர்.
சாரம் குயவர்பாளையம், டி.ஆர்.நகர் முதல் தெருவைச் சேர்ந்த கணபதி மகன் மாதேஷ், 20; சாரம் சின்னையன்பேட், கெங்கையம்மன் கோவில் வீதி அறிவாளன் மகன் ஆகாஷ், 21; புது சாரம், முதல் குறுக்கு தெரு மணிகண்டன் மகன் சந்தோஷ், 20; ஆலங்குப்பம், அன்னை நகர் பாரதி வீதி எட்டியான் மகன் கிள்ளிவளவன், 20 ஆகியோர் என தெரிந்தது.
நால்வரிடம் நடத்திய சோதனையில், சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் கஞ்சா மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.
நால்வரையும் கைது செய்த போலீசார் 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
நால்வரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.