/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுவாமி சிலைகள் திருட்டு திருபுவனையில் 4 பேர் கைது
/
சுவாமி சிலைகள் திருட்டு திருபுவனையில் 4 பேர் கைது
ADDED : ஆக 18, 2025 04:15 AM
திருபுவனை: திருபுவனை அருகே கோவிலில் சுவாமி சிலைகள் திருடிய வழக்கில் 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை அடுத்த திருவாண்டார்கோவில் இந்திய உணவுக் கிடக்கு எதிரே திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள தலா 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட பித்தளை உலோகத்தால் ஆன வினாயகர், முருகன், பெருமாள், திரவுபதியம்மன், போத்ராஜா ஆகிய 5 சுவாமி சிலைகள் கடந்த 7ம் தேதி திருட்டுபோனது.
இதில் கோவிலுக்கு பின் புறத்தில் கிடந்த வினாயகர் சிலை மீட்கப்பட்டது. கோவில் பூசாரி முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
அப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், கடலுார் மாவட்டம், துாக்கணாம் பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் சிலைகளை திருடியது தெரியவந்தது.
அவர்கள போலீசார் கைது செய்து விசாரித் ததில், கரிக்கலாம்பாக் கத்தை சேர்ந்த ராஜாராமன், 35; என்பவர் மூலம், வில்லியனுாரில் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் முகமதுரஷிக், 35; என்பவரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. அதையடுத்து, இரு சிறுவர்கள் மற்றும் ராஜாராமன், முகமதுரஷிக் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். சிறுவர்கள் இருவர், அரியாங்குப்பம் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.