/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் நீதிமன்றத்தில் 4 வழக்குகளுக்கு தீர்வு
/
மக்கள் நீதிமன்றத்தில் 4 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : ஜூன் 29, 2025 12:10 AM

புதுச்சேரி : மக்கள் நீதிமன்றத்தில் 4 வழக்குகள் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டு, ரூ. 90 ஆயிரம் முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.
மத்திய அரசு நுகர்வோர் விவகாரங்கள் துறை மற்றும் தேசிய நுகர்வோர் பூசல்கள் குறைதீர்வு ஆணைய வழிகாட்டுதலின்படி, நுகர்வோர் புகார்களை கால நேரத்திறகுள் தீர்வு காணும் நோக்கில், புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில், மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.
மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் அடங்கிய அமர்வில், மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையத்தில் இருந்து, 9 வழக்குகள் சமாதானத்திற்கானது என, கண்டறியப்பட்டு, பேச்சு வார்த்தையில் 4 வழக்குகள் உடன்படிக்கை ஏற்பட்டு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றத்தில், தீர்வு காணப்பட்ட 90 ஆயிரம் ரூபாயை, முறையீட்டாளர்களுக்கு அம்பேத்கர் அரசு சட்ட கல்லுாரி முதல்வர் சீனிவாசன் வழங்கினார்.
இதில், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் நாராயணகுமார், பொருளாளர் ராஜ்பிரகாஷ், வழக்கறிஞர்கள் விமல், முரளி, லட்சுமிதரன், வெற்றிவேலன், தண்டபாணி உட்பட சட்ட கல்லுாரி மாணவர்கள், காப்பீட்டு நிறுவன மற்றும் பொதுத்துறை வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை நுகர்வோர் குறை தீர்வு ஆணைய பதிவாளர் விஜயா ரவிந்திரன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.