/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் தீபாவளி அன்று காற்றின் மாசு 4 மடங்கு அதிகரிப்பு
/
புதுச்சேரியில் தீபாவளி அன்று காற்றின் மாசு 4 மடங்கு அதிகரிப்பு
புதுச்சேரியில் தீபாவளி அன்று காற்றின் மாசு 4 மடங்கு அதிகரிப்பு
புதுச்சேரியில் தீபாவளி அன்று காற்றின் மாசு 4 மடங்கு அதிகரிப்பு
ADDED : நவ 04, 2024 06:31 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த தீபாவளியை விட 4 மடங்கு காற்று மாசு அதிகரித்தது இருந்தது ஆய்வில் தெரியவந்தது.
தீபாவளி பண்டிகையின்போது உருவாகும் காற்று மாசு மற்றும் ஒலி மாசுவை அளவீடு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு வாரியம் தீபாவளி முந்தைய தினம் மற்றும் தீபாவளி தினத்தன்றும் 24 மணி நேரம் ஒலி மற்றும் காற்று மாசு அளவை கண்காணித்து வருகிறது.
அதன்படி, இந்தாண்டு தீபாவளியான கடந்த 31ம் தேதி, மூலக்குளம் மற்றும் முதலியார்பேட்டை ஆகிய இரண்டு இடங்களில் காற்று மாசு மற்றும் ஒலி மாசு கண்காணிக்கும் பணி நடந்தது. இதேபோல் காரைக்கால் கோவில்பத்து பகுதியிலும் கண்காணிக்கப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று பதிவான அளவை விட இந்தாண்டு காற்றின் மாசு 20 சதவீதமும், ஒலி மாசு 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் சாதாரண நாட்களில் காற்றில் கலந்துள்ள மிதவை மாசு துகள்கள் (பி.எம்.10, பி.எம்.2.5), கந்தக ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்ஸ்சைடு ஆகியவை 65 மைக்ரான் அளவில் இருக்கும். ஆனால், தீபாவளி அன்று இந்த மதிப்பு 4 மடங்கு உயர்ந்து 240 மைக்ரான் அளவு பதிவாகி இருந்தது. அதுபோல் கந்தக ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்ஸ்சைடு ஆகியவை 2 மடங்கு அதிகரித்தது.
ஒலி மாசு பொருத்தவரையில் சாதாரண நாட்களில் 65 டெசிபல் அளவில் இருக்கும். தீபாவளி அன்று புதுச்சேரி காரைக்காலில் 75 முதல் 95 டெசிபல் வரை பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக காற்றின் தர குறியீடு மோசமான நிலையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.