தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 4 காவேரி நகர், செல்லம்பாப்பு நகரில் காங்., சிவசங்கர் ஓட்டு சேகரிப்பு

 4 காவேரி நகர், செல்லம்பாப்பு நகரில் காங்., சிவசங்கர் ஓட்டு சேகரிப்பு

 4 காவேரி நகர், செல்லம்பாப்பு நகரில் காங்., சிவசங்கர் ஓட்டு சேகரிப்பு


ADDED : மார் 28, 2026 08:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 08:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி காவேரி நகர், செல்லம்பாப்பு நகர், சரவணா நகர், கொண்டா ரெட்டி வீதி, மங்கன் வீதி ஆகிய பகுதிகளில் மக்கள் நலத்திட்ட பணிகளை எடுத்து கூறி, காங்., வேட்பாளர் சிவசங்கர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில், உழவர்கரை தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் சிவசங்கர், தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒருபகுதியாக, நேற்று 5வது நாளாக உழவர்கரை தொகுதிக்குட்பட்ட காவேரி நகர், செல்லம்பாப்பு நகர், சரவணா நகர், கொண்டா ரெட்டி வீதி, மங்கன் வீதி ஆகிய பகுதிகளில் காங்., வேட்பாளர் சிவசங்கர் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, எம்.எல்.ஏ.,வாக கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதிகளில் மேற்கொண்ட மக்கள் நலத்திட்ட பணிகளை விளக்கி கூறியும், மீண்டும் தன்னை தேர்தலில் வெற்றி பெற்றால் மேற்கொள்ள உள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பட்டியலிட்டு, 'கை' சின்னத்திற்கு ஓட்டு அளிக்குமாறு கேட்டு கொண்டார்.

இதில், அப்பகுதி முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us