ADDED : நவ 18, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கடலுார் அடுத்துள்ள கோண்டூரை சேர்ந்தவர் வேல்முருகன் 30; பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் சொந்த வேலையாக சோரியாங்குப்பம் சென்றுள்ளார். பின் இரவு 10 மணியளவில், அங்குள்ள மதுக்கடை எதிரே விழுப்புரம் - நாகப்பட்டினம் புறவழிச்சாலை கடக்க முயன்றார். அப்போது, கடலுார் நோக்கி சென்ற பைக், அவர் மீது மோதியது. இதில், வேல்முருகன் படுகாயமடைந்தார்.
அதேபோல், விபத்து ஏற்படுத்திய பைக்கில் வந்த திருப்பாதிரிப்புலியூர் ராஜேஷ்குமாருடன், அவரது மனைவி கீதாலட்சுமி, மகன் சர்வேஷ் 3 பேரும் கா யமடைந்தனர். காயமடைந்த 4 பேரை யும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
புகாரின் பேரில் கிருமாம் பாக்கம் தெற்கு போக்கு வரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

