/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு காவல் துறையில் பொறுப்பு
/
4 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு காவல் துறையில் பொறுப்பு
4 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு காவல் துறையில் பொறுப்பு
4 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு காவல் துறையில் பொறுப்பு
ADDED : ஜூன் 20, 2025 06:13 AM
புதுச்சேரி : இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் புதுச்சேரி காவல் துறையில் சேர்ந்த நிலையில் பொறுப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம், புதுச்சேரி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பல்வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்தது.
அதன்படி குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவு சீனியர் எஸ்.பி., நாராசைதன்யா டில்லிக்கும் மாற்றப்பட்டார். இவர்களுக்கு பதிலாக தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூவில் பணியாற்றி வரும் அனில்குமார் லால், டில்லியில் பணியாற்றி வரும் நித்யா ராமகிருஷ்ணன் ஆகிய இரு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் புதுச்சேரிக்கு மாற்றப்பட்டனர்.
இவர்கள் புதுச்சேரி அரசில் அண்மையில் சேர்ந்த நிலையில் கவர்னர் உத்தரவின்படி, அவர்களுக்கு தற்போது காவல் துறையில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐ.பி.எஸ்., அதிகாரி அனில் குமார் போலீஸ் தலைமையக சீனியர் எஸ்.பி.,யாகவும், அங்கிருந்த சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரி அனிதா ராய் ஐ.ஆர்.பி.என்., கமாண்டன்ட் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர் ஆயுத படை பிரிவினை கூடுதலாக கவனிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2021ம் பேட்ஜ் ஐ.பி.எஸ்., அதிகாரியான நித்யா ராமகிருஷ்ணன் போக்குவரத்து போலீசின் சீனியர் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி குற்றம், நுண்ணறிவு பிரிவு சீனியர் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை தலைமை செயலர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளார்.