ADDED : ஏப் 15, 2026 05:45 PM
புதுச்சேரி: சாமினார் பந்தல் மோட்டார் பைக் மீது விழுந்ததில் ஏற்பட்ட பிரச்னையில் தம்பதியை தாக்கிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல், 26. இவரது மகள் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு, ஆட்டுப்பட்டி சமுதாய நலக்கூடத்தில் அருகில் சாமினார் பந்தல் அமைத்திருந்தார். சாமினார் பந்தலின் சைடு பகுதி, அங்கு நிறுத்திருந்த பைக் மீது விழுந்ததில், பைக் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது. அதில், பைக் உரிமையாளர் அய்யப்பன் அவரது தம்பி வல்லவன் மற்றும் விக்கி சுரேந்தர் ஆகிய 4 பேரும் வெற்றிவேலிடம் பிரச்னை செய்து, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தடுக்க வந்த அவரது மனைவியும் தாக்கினர்.
இதுகுறித்து, வெற்றிவேல் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, அய்யப்பன் உட்பட 4 பேரை தேடிவருகின்றனர்.
