நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கொம்பாக்கம் அருகே பணம் வைத்து சூது விளையாடுவதாக, முதலியார்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அந்த பகுதியில், சோதனை நடத்தினர்.
அங்கு பணம் வைத்து ரம்மி சூதாட்டம் விளையாடிய வில்லியனுாரை சேர்ந்த ஜெகதீஷ், 26, கொம்பாக்கம் ஜெகன், 31, ஒதியம்பட்டு ராம்குமார், 25, பாஸ்கர், 24, ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

