/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொபைல் போன்கள் பறிப்பு 3 சிறுவர் உட்பட 4 பேர் கைது
/
மொபைல் போன்கள் பறிப்பு 3 சிறுவர் உட்பட 4 பேர் கைது
மொபைல் போன்கள் பறிப்பு 3 சிறுவர் உட்பட 4 பேர் கைது
மொபைல் போன்கள் பறிப்பு 3 சிறுவர் உட்பட 4 பேர் கைது
ADDED : அக் 18, 2024 11:25 PM

புதுச்சேரி: மொபைல் போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவை சேர்ந்தவர் நிழலிசா, 26. இவர் கடந்த, 15ம் தேதி ஒதியஞ்சாலை வழியாக நடந்து சென்ற போது, பைக்கில் சென்ற மர்ம நபர்கள் இருவர், அவரது கையில் இருந்த மொபைல் போனை பறித்து சென்றனர். இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். ஒதியஞ்சாலை போலீசார், துாய்மா வீதியில், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக மூன்று பைக்குகளில் வந்த 4 பேரை, நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள், திண்டிவனம், விட்டலாபுரத்தை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், 20; மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்கள் என, தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் நான்கு பேரும், உருளையன்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் பெண்களிடம் மொபைல் போன் பறிக்கும் சம்வங்களில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். அவர்களிடமிருந்து 3 மொபைல் போன்கள், அவர்கள் ஓட்டி வந்த 3 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நான்கு பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோகுலகிருஷ்ணனை, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

