தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 4 பேரிடம் ரூ. 1.41 லட்சம் மோசடி

 4 பேரிடம் ரூ. 1.41 லட்சம் மோசடி

 4 பேரிடம் ரூ. 1.41 லட்சம் மோசடி


ADDED : நவ 17, 2025 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2025 02:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ.1.41 லட்சம் இழந்துள்ளனர்.

சேலியமேடு பகுதியை சேர்ந்தவரை, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் பகுதிநேர வேலையாக வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார்.

இதை நம்பி, மர்மநபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 1 லட்சம் 11 ஆயிரத்து 888 முதலீடு செய்துள்ளார்.

பின், அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரிய வந்தது.

இதேபோல், பாகூரைச் சேர்ந்தவர் 11 ஆயிரத்து 836, உப்பளத்தை சேர்ந்தவர் 10 ஆயிரத்து 350, கரையாம்புத்துாரைச் சேர்ந்தவர் 7 ஆயிரத்து 400 என, 4 பேர் மோசடி கும்பலிடம் 1 லட்சத்து 41 ஆயிரத்து 474 ரூபாய் இழந்துள்ளனர்.

சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us