/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒரே நாளில் 4 பேரிடம் ரூ. 1.52 கோடி 'அபேஸ்'; சைபர் கிரைம் மோசடி கும்பல் கைவரிசை
/
ஒரே நாளில் 4 பேரிடம் ரூ. 1.52 கோடி 'அபேஸ்'; சைபர் கிரைம் மோசடி கும்பல் கைவரிசை
ஒரே நாளில் 4 பேரிடம் ரூ. 1.52 கோடி 'அபேஸ்'; சைபர் கிரைம் மோசடி கும்பல் கைவரிசை
ஒரே நாளில் 4 பேரிடம் ரூ. 1.52 கோடி 'அபேஸ்'; சைபர் கிரைம் மோசடி கும்பல் கைவரிசை
ADDED : அக் 30, 2024 04:37 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 4 பேரிடம் ரூ. 1.52 கோடி பணத்தை சைபர் கிரைம் மோசடி கும்பல் திருடி உள்ளது.
காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். வெளிநாட்டில் வேலை செய்து விட்டு புதுச்சேரி திரும்பியவர். இவரை டெலிகிராம் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் டிரேடிங் செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறினார்.
அதை நம்பி மர்ம நபர் அனுப்பிய லிங்க் மூலம் செல்வராஜ் முதலில் சிறிய தொகை அனுப்பினார். அதற்கு அதிக லாபம் கிடைத்ததுபோல் ஆன்லைனில் காண்பித்தது. இதனால் மொத்தம் ரூ. 1.03 கோடி முதலீடு செய்திருந்தார். லாப பணம் முழுவதையும் எடுக்க முயற்சித்தபோது அவரது ஆன்லைன் அக்கவுண்ட் முடக்கப்பட்டு இருந்தது. ஏமாற்றப்பட்டதை அறிந்த செல்வராஜ், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதுபோல், முதலியார்பேட்டை ஓய்வு பெற்ற ஆசிரியர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கி அதிகாரி பேசுவதாக கூறி, வங்கி கணக்குடன் கே.ஒய்.சி., இணைக்க வேண்டும், ஏ.டி.எம்., கார்டு தகவல் மற்றும் ஒ.டி.பி., கூறுங்கள் என தெரிவித்து பார்த்தசாரதி வங்கி கணக்கில் இருந்த ரூ. 4.5 லட்சம் பணத்தை திருடினர்.
அதுபோல் ரெயின்போ நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பழனிசாமியை தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கி அதிகாரி பேசுவதாக கூறி அறிமுகப்படுத்தி கொண்டார். வங்கி கணக்குடன் கே.ஒய்.சி.யை இணைக்க வேண்டும் என கூறி ஏ.டி.எம்., கார்டு தகவல்கள் மற்றும் ஒ.டி.பி., எண் பெற்று அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 12.98 லட்சம் பணத்தை திருடினர்.
நேற்று முன்தினம் ஒரே நாளில் நால்வரிடம் சைபர் கிரைம் மோசடி கும்பல் ரூ. 1.52 கோடி பணத்தை திருடியுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.