/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி அருகே கார்கள் மோதல் போலீஸ் ஏட்டு உட்பட 4 பேர் பலி
/
புதுச்சேரி அருகே கார்கள் மோதல் போலீஸ் ஏட்டு உட்பட 4 பேர் பலி
புதுச்சேரி அருகே கார்கள் மோதல் போலீஸ் ஏட்டு உட்பட 4 பேர் பலி
புதுச்சேரி அருகே கார்கள் மோதல் போலீஸ் ஏட்டு உட்பட 4 பேர் பலி
ADDED : ஜன 14, 2025 03:55 AM

வில்லியனுார்: விழுப்புரம் மாவட்டம், முட்டத்துாரை சேர்ந்தவர் பிரபாகரன், 57, விழுப்புரம் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்தார்.
தற்போது, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு பணியில் இருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபாகரனின் உறவினர் பெண் நேற்று முன்தினம் இறந்தார்.
அதையொட்டி, 'இண்டிகோ' காரை வாடகைக்கு எடுத்து பிரபாகரன், அவரது மனைவி ஏஞ்சலின், 50, மனைவியின் தங்கை சுசீலா, 37, மருத்துவமனையில் இறந்தவரின் மகள் ஷானி பிரெய்லி, 12, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்தனர்.
விழுப்புரம் பானாம்பட்டு கிராமத்தை சேர்ந்த சந்திரன், 38, என்பவர் காரை ஓட்டினார்.
இரவு 11:10 மணிக்கு மதகடிப்பட்டு மேம்பாலத்தில் கார் வந்தபோது, மதகடிப்பட்டில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற, 'மாருதி ஸ்விப்ட்' கார், பிரபாகரன் வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் இரு கார்களும் அப்பளம்போல நொறுங்கின.
கார் முன் சீட்டில் அமர்ந்திருந்த போலீஸ் ஏட்டு பிரபாகரன், டிரைவர் சந்திரன், ஸ்விப்ட் காரை ஓட்டி வந்த லிங்காரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முகிலன், 37, அதே கிராமத்தை சேர்ந்த கதிரவன், 52, ஆகிய நான்கு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
படுகாயமடைந்த சுசிலாபிரசன்னா, ஷானி பிரெய்லி ஆகியோரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏஞ்சலின் சென்னை மியாட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.