/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைன் மோசடி கும்பலிடம் 4 பேர் ரூ.1.97 லட்சம் இழப்பு
/
ஆன்லைன் மோசடி கும்பலிடம் 4 பேர் ரூ.1.97 லட்சம் இழப்பு
ஆன்லைன் மோசடி கும்பலிடம் 4 பேர் ரூ.1.97 லட்சம் இழப்பு
ஆன்லைன் மோசடி கும்பலிடம் 4 பேர் ரூ.1.97 லட்சம் இழப்பு
ADDED : அக் 26, 2024 05:52 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று முன்தினம் 4 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ஒரு லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளனர்.
புதுச்சேரி, வில்லியனுார் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
இதைநம்பி ஜெயக்குமார் ரூ.89 ஆயிரம் அவர் தெரிவித்த கணக்கிற்கு அனுப்பியுள்ளார். அதன்பின், அந்த நபரை தொடர்பு கொள்ள முடியாததால் அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதேபோல், சொக்கநாதன்பேட் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரை, வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய கூறியுள்ளார். இதைநம்பி செல்வராஜ், அவரது வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் செலுத்தி ஏமாந்துள்ளார்.
மேலும், அரும்பார்த்தபுரம் காளியம்மள் என்பவருடைய கிரெட்டி கார்டில் இருந்து ஆன்லைன் மோசடி கும்பல் ரூ.87 ஆயிரம் எடுத்து ஏமாற்றியுள்ளது. மூலக்குளம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்குமார், ஓ.எல்.எக்ஸ் ஆன்லைனில் குறைந்த விலைக்கு விளையாட்டு ஸ்டேஷன் விளம்பரத்தை பார்த்துள்ளார். அதனை வாங்குவதற்காக ரூ. 11 ஆயிரம் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி இழந்துள்ளார்.
இவ்வாறு நேற்று முன்தினம் 4 பேர் மோசடி கும்பலிடம் ஒரு லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்து, சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.