ADDED : மார் 18, 2026 04:25 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பங்கு சந்தையில் முதலீடு செய்வது குறித்து விளம்பரம் ஒன்றை பார்த்தார். பின், அதிலிருந்த எண்ணை தொடர்பு கொண்டு மர்ம நபரிடம் அப்பெண் பேசியுள்ளார். அப்போது, மர்ம நபர் கூறியதை நம்பி அப்பெண் அந்த மர்ம நபருக்கு ரூ.74 ஆயிரத்தை முதலீடு செய்து ஏமாந்தார்.
புதுச்சேரியை சேர்ந்த நபர் ஒருவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு குறைந்த வட்டியில் ரூ. 5 லட்சம் லோன் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி மேற்கூறிய நபர் லோனுக்கு விண்ணப்பித்து, செயலாக்க கட்டணமாக ரூ.30 ஆயிரத்தை அனுப்பி ஏமாந்தார். மற்றொரு நபர் 30 ஆயிரம், புதுச்சேரி பெண் 30 ஆயிரம், என, 4 பேர் 1.69 லட்சத்தை மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர்.
