தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 4 பேரிடம் ரூ. 56 ஆயிரம் ஆன்லைனில் மோசடி

 4 பேரிடம் ரூ. 56 ஆயிரம் ஆன்லைனில் மோசடி

 4 பேரிடம் ரூ. 56 ஆயிரம் ஆன்லைனில் மோசடி


ADDED : ஜன 20, 2026 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த 4 பேரிடம் ரூ. 56 ஆயிரம் ஆன்லைனில் மோசடி செய்த மர்ம நபர்களை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்

புதுச்சேரி ஐயங்குட்டிபாளையத்தை சேர்ந்த நபர், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு விட ஆன்லைனில் விளம்பரம் செய்தார். அவரை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட மர்மநபர், தான் மத்திய அரசின் பாதுகாப்பு துறையில் பணிபுரிவதாக கூறினார். மேலும் தான் கவுகாத்தியில் இருந்து, திருவனந்தபுரத்திற்கு மாற்றலாகி வர உள்ளதாக கூறி, வாடகைக்கு வீடு கேட்டார்.

இதனைதொடர்ந்து, தனது வாடகையை பாதுகாப்பு துறை குழு வழங்கும். அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என கூறியதன் பேரில் மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு அவர் 20 ஆயிரத்தை அனுப்பி ஏமாந்தார். இதேபோல், முதலியார்பேட்டையை சேர்ந்த நபர் 17 ஆயிரத்து 715 ரூபாய். லாஸ்பேட்டையை சேர்ந்த பெண் 13 ஆயிரத்து 996 ரூபாய். ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த நபர் 4 ஆயிரத்து 740 ரூபாய். என மொத்தம் 56 ஆயிரத்து 451ரூாயை ஆன்லைன் மோசடியில் இழந்தனர்.

புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us