தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 4 பேரிடம் ரூ.4.17 லட்சம் மோசடி

 4 பேரிடம் ரூ.4.17 லட்சம் மோசடி

 4 பேரிடம் ரூ.4.17 லட்சம் மோசடி


ADDED : மார் 10, 2026 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, உருளையன்பேட்டையை சேர்ந்தவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்தபடி பகுதிநேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.

இதைநம்பிய, அப்பெண் மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணைகளாக ரூ. 3 லட்சத்து 92 ஆயிரம் முதலீடு செய்தார். பின், அதன் மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.

இதேபோல், கரியமாணிக்கத்தை சேர்ந்த பெண் 7 ஆயிரத்து 900, சேதராப்பட்டைச் சேர்ந்தவர் 13 ஆயிரத்து 400, புதுச்சேரியைச் சேர்ந்த பெண் 4 ஆயிரம் என 4 பேர் மோசடி கும்பலிடம் ரூ. 4 லட்சத்து 17 ஆயிரத்து 300 இழந்துள்ளனர்.

இது குறித்து புகார்களின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us