ADDED : பிப் 08, 2026 04:10 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேரிடம் ரூ. 4.51 லட்சம் ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுாரை சேர்ந்த பெண்ணின், வங்கி கணக்கில் இருந்து அவரது அனுமதியின்றி, மர்மநபர்கள் ரூ.4 லட்சம் எடுத்து ஏமாற்றியுள்ளனர்.
இதேபோல், அரியூரை சேர்ந்தவர் வங்கி கணக்கில் இருந்து 40 ஆயிரத்து 611, முதலியார்பேட்டை பெண் 7 ஆயிரத்து 700, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 3 ஆயிரத்து 317 என, 4 பேர் மோசடி கும்பலிடம் 4 லட்சத்து 51 ஆயிரத்து 628 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
