/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் போலீஸ் தடியடி 4 போலீசார், 11 பேர் படுகாயம்
/
புதுச்சேரியில் போலீஸ் தடியடி 4 போலீசார், 11 பேர் படுகாயம்
புதுச்சேரியில் போலீஸ் தடியடி 4 போலீசார், 11 பேர் படுகாயம்
புதுச்சேரியில் போலீஸ் தடியடி 4 போலீசார், 11 பேர் படுகாயம்
ADDED : பிப் 12, 2026 04:49 AM

புதுச்சேரி: பணி நிரந்தரம் கோரி, முதல்வரை முற்றுகையிட முயன்ற பொதுப்பணித்துறை ஊழியர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதில், நான்கு போலீசார் உட்பட, 15 பேர் படுகாயமடைந்தனர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் கோரி, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
பொதுப்பணித்துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என முதல்வர் ரங்கசாமி, கடந்தாண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவித்தார்.
அந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி, பொதுப்பணித்துறை ஊழியர்கள் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி நேற்று, சிங்காரவேலர் நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமியை, அரசு ஊழியர்கள், சங்க தலைவர் சரவணன் தலைமையில் முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து, முதல்வரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். ஆத்திரமடைந்த அரசு ஊழியர்கள், வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கத்தில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது, போராட்டக்குழுவினர், போலீசாரை தாக்கினர்.
அதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பீதியடைந்த ஊழியர்கள், நாலாப்புறமும் சிதறி ஓடினர்.
தடியடியில் காயமடைந்த பொதுப்பணித்துறை ஊழியர்கள், 11 பேரும், ஊழியர்கள் தாக்கியதில் காயமடைந்த நான்கு போலீசாரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கலவரத்திற்கு காரணமான ஊழியர் சங்கத் தலைவர் சரவணனை கைது செய்து, அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

