தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணல் கடத்தலுக்கு உடந்தை :4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

மணல் கடத்தலுக்கு உடந்தை :4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

மணல் கடத்தலுக்கு உடந்தை :4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்


UPDATED : மே 25, 2026 10:52 PM

ADDED : மே 25, 2026 10:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2026 10:52 PM ADDED : மே 25, 2026 10:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் சரகத்தில் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக 4 போலீ சார் ஆயுதப்படைக்கு மாற்ற ப்பட்டனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் சரகத்தில் மலட்டா ற்றையொட்டி, பல கிராமங்கள் உள்ளது. இங்கு, சவுடு மண் என்கிற பெயரில் கடந்த 2019 ம் ஆண்டு முதல் இப்பகுதி நில உரிமையாளர்களிடம் ஒப்பந்தம் செய்து, பொதுப்பணித்துறை, கனிம வளத்துறை அனுமதியுடன் நிலத்தில் 40 அடி ஆழம் வரை மணல் அள்ளி விற்பனை செய்து வந்தனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் புதுப்பேட்டை போலீஸ் சரகம் அம்மாபேட்டை, ஒ.பலாப்பட்டு, மணம்தவிழ்ந்தபுத்துார் ஆகிய கிராமங்களில் 4 இடங்களில் சவுடு மண் அள்ளும் பணி துவங்கியது. விதிகளை மீறி 40 அடி ஆழத்திற்கு ஒவ்வொரு நிலத்தில் பகுதியிலும் மணல் அள்ளப்பட்டது.

இதனால், சவுடு மண் அள்ள அனுமதி பெற்ற நிலத்தின் அருகில் உள்ள விவசாய நில உரிமையாளர்கள், அரசு அனுமதியின்றி சவுடு மண் என்கிற பெயரில் மணல் அள்ளி கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள், விவசாயிகள் புகார் தெரிவித்தும், வருவாய்துறை, கனிமவளத்துறை, போலீசார் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த 21ம் தேதி எஸ்.பி., ஜெயக்குமார் உத்திரவின்பேரில் மணல் ஏற்றி சென்ற 8 லாரிகளை பண்ருட்டி போலீசார் பறிமுதல் செய்து, 8 பேரை கைது செய்தனர்.

எஸ்.பி.ஜெயக்குமார் மணல் அள்ளிய நில பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அனுமதி மீறி மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் பட்டியல் போலீசார் சார்பில் த யா ரானாது. இதில் , புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகனுக்கு டிரைவராக இருந்த கிருபாகரன், தேவகிருஷ்ணன், நிலைய எழுத்தர்கள் கிருஷ்ணவேல், ராஜேஷ் ஆகிய 4 பேர் தொடர்பு இருப்பது தெரியவநதது. அதையடுத்து, அவர்கள் நான்கு பேரும் அதிரடியாக கடலுார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி., ஜெயக்குமார் உத்தர விட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us