/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
4 பெண்களிடம் ரூ.3.30 லட்சம் மோசடி
/
4 பெண்களிடம் ரூ.3.30 லட்சம் மோசடி
ADDED : நவ 07, 2025 12:44 AM
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்த 4 பெண்கள் மோசடி கும்பலிடம் ரூ. 3.30 லட்சம் ஏமாந்துள்ளனர்.
திருபுவனையை சேர்ந்த பெண் ஒருவரை தொடர்பு கொண்ட மர்மநபர், டெலிகிராம் செயலி மூலம் ஆன்லைனில் முதலீடு செய்து அதிக வருமானம் பெறலாம் என, கூறியுள்ளார். அதை நம்பி பல்வேறு தவணைகளாக 2 லட்சத்து 44 ஆயிரத்து 383 ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாபத்தை திரும்ப எடுக்க முயன்றபோது, அவரது கணக்கை முடக்கி, கூடுதல் பணம் கேட்டுள்ளார். அதன்பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த பெண் 43 ஆயிரத்து 999, கரசூரை சேர்ந்த பெண் 32 ஆயிரம், டி நகரை சேர்ந்த பெண் 10 ஆயிரம் என, 4 பெண்கள் மோசடி கும்பலிடம் 3 லட்சத்து 30 ஆயிரத்து 382 ரூபாய் ஏமாந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

