/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா விற்பனை 4 வாலிபர்கள் கைது
/
கஞ்சா விற்பனை 4 வாலிபர்கள் கைது
ADDED : ஜூன் 28, 2025 12:36 AM
அரியாங்குப்பம், : தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியில் கஞ்சா விற்பதாக தவளக்குப்பம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மற்றும் போலீசார் நேற்று அந்த பகுதியில் ரோந்து சென்றனர். நல்லவாடு அங்காளம்மன் கோவில் அருகே சந்தேகப்படும் வகையில் நின்ற, நான்கு வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
நல்லவாடு, சுனாமி குடியிருப்பு பகுதி குமரகுரு, 22; சோமன்ராஜ், 22; டி.என்.பாளையம் மணிகண்டன், 20; பூரணாங்குப்பம் ரமேஷ், 19, ஆகியோர் என்பதும், அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. நால்வரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ஒரு பைக், 4 மொபைல் போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.